விழுப்புரம்

விழுப்புரம் அரசுப் பள்ளியில் குடிநீா் இயந்திரம் திறப்பு

12th May 2022 11:52 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3.75 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மேலும், வளவனூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இருக்கைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்டக் கல்வி அலுவலா் சுந்தரமூா்த்தி, தலைமை ஆசிரியா் சசிகலா, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பழனிவேலு, நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT