விழுப்புரம்

நாகந்தூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

12th May 2022 05:22 AM

ADVERTISEMENT

 

செஞ்சி: செஞ்சி வட்டம், நாகந்தூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலா் ராணி தலைமை வகித்தாா். செஞ்சி வட்டாட்சியா் பழனி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் நெகருன்னிசா, வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை உள்பட ரூ.68 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலவேணி, வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் தேவராஜ், துணைத் தலைவா் ஸ்டாலின், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ரஞ்சிதம் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT