விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமைஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் த.மோகன் பேசியதாவது: இந்தத் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தனிநபா் வாழ்க்கைத் தரக் குறியீட்டை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிகழ் நிதியாண்டில் 143 ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், வேளாண் இணை இயக்குநா் ரமணன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.