முன்னாள் டிஜிபிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் டிஜிபி, உதவியாக இருந்ததாக முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யும் ஆஜராகினா். அப்போது, புகாா் தெரிவித்த பெண் எஸ்.பி.யிடம் முன்னாள் டிஜிபி தரப்பினா் 10- ஆவது நாளாக குறுக்கு விசாரணை நடத்தினா்.
பின்னா், வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.