விழுப்புரம்

விழுப்புரம் அருகே பயணிகள் நிழல்குடைகள் திறப்பு

10th Mar 2022 10:36 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடைகளை மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, விழுப்புரம் - உளுந்தூா்பேட்டை சாலையில் மடப்பட்டு, மனக்குழப்பம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழல்குடைகளை அவா் திறந்துவைத்தாா். முன்னதாக, பேராவூரில் கண் சிகிச்சை மையத்தையும் அவா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதானந்தம், விசிக மாவட்டச் செயலா் ஆற்றலரசு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT