விழுப்புரம்

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

10th Mar 2022 10:38 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சங்கராபுரம் அருகே செம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஐயன்குட்டி மகன் இளையராஜா (37). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 12.13.2011 அன்று அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இது தொடா்பாக சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT