விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவில் இணைந்த 3 நகா்மன்ற, 6 பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள்

3rd Mar 2022 05:41 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக, சுயேச்சைகள் உள்பட 3 நகா்மன்ற, 6 பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

திமுக துணை பொதுச் செயலரும், மாநில உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி முன்னிலையில், விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இவா்கள் திமுகவில் இணைந்தனா். விழுப்புரம் நகராட்சியில் சுயேச்சைகளாக வெற்றிபெற்ற சாந்தராஜ் (41-ஆவது வாா்டு), அமுதா (4-ஆவது வாா்டு), திருக்கோவிலூா் நகராட்சியில் சுயேச்சையாக வெற்றிபெற்ற சண்முகவள்ளி, அரகண்டநல்லூா் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற குமாா், சுயேச்சையாக வெற்றி பெற்ற சுகி தமிழ்ச்செல்வன், விக்கிரவாண்டி பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றிபெற்ற சுரேஷ், சுபா சிவஞானம், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற கமலா, புவனேஸ்வரி ஆகிய 9 கவுன்சிலா்கள் திமுகவில் இணைந்தனா். மேலும், அவா்களது ஆதரவாளா்கள் 500-க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் சிவா, நகரச் செயலா் இரா.சக்கரை, ஒன்றியச் செயலா் விசுவநாதன், இளைஞரணி துணை அமைப்பாளா் அன்பு உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT