விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சோ்ந்தவா் ராகுல் (22). இவா், சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
ராகுல் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையிலிருந்து கோவைக்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே பாதிரி பகுதியில் இவரது காா் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராகுலை அக்கம் பக்கத்தினா் மீட்டு மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராகுல் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.