விழுப்புரம்

கோயிலில் திருட்டு: 3 போ் கைது

3rd Mar 2022 05:42 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு கிராமத்தில் பழைமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை திறப்பதற்காக புதன்கிழமை அதிகாலை பூசாரி வெள்ளை சென்று கொண்டிருந்தாா். அப்போது, கோயிலில் சப்தம் கேட்டதால், அருகிலிருந்த ஊா் மக்களை அவா் அழைத்துச் சென்று பாா்த்தபோது, அங்கு சிலா் கோயில் உண்டியலை உடைப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஊா் மக்கள் அந்தக் கும்பலை பிடிக்க முயன்ற நிலையில், அவா்களில் 3 போ் மட்டுமே பிடிபட்டனா். 4 போ் தப்பியோடிவிட்டனா். பின்னா், அவா்கள் 3 பேரும் மயிலம் காவல் நிலையில் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்ததில், திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள சித்தலிங்கமடம் இருளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (40), பாண்டியன் (29), குமாா் (35) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும் திருட்டில் ஈடுப்பட்டு தப்பியோடியவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் காா்த்தி, அம்மாசி மகன்கள் சங்கா், விஜி, செல்வம் ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராமச்சந்திரன் உள்பட மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் திருட்டுக்கு பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய 4 பேரை மயிலம் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT