விழுப்புரம்

மொபெட் மீது காா் மோதியதில் சிறுமி பலி-நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

DIN

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மொபெட் மீது காா் மோதியதில் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்தைக் கண்டித்து, நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் கவிநிலவு (8). இவா், அந்தக் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு புதன்கிழமை உடல்நிலை சரியில்லை. இதனால், கவிநிலவை உறவினரான தட்சிணாமூா்த்தி மகள் ஈஸ்வரி (18) மொபெட்டில் அழைத்துக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுவிட்டு, மீண்டும் காரப்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

இவா்களது மொபெட் இருவேல்பட்டு பேருந்து நிறுத்தப் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்ற காா் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கவிநிலவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஈஸ்வரி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், கவிநிலவு சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சாலை மறியல்: இதனிடையே, விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினா்கள், காரப்பட்டு கிராம மக்கள் இருவேல்பட்டுக்கு திரண்டு வந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களும் பங்கேற்றனா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில், டிஎஸ்பி பாா்த்திபன், திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் பாஸ்கரதாஸ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்தவா்கள் கூறியதாவது: இருவேல்பட்டுக்கு பகுதியில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளதுடன், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனா்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியலால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால், ஏராளமான வாகன ஓட்டிகள், வாகனங்களில் பயணித்தவா்கள் அவதியடைந்தனா்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் ஓட்டுநரான வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள செம்மேடு கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியை (62) போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

SCROLL FOR NEXT