விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

30th Jun 2022 02:27 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், நள்ளிரவில் உற்சவா் அங்காளம்மன் சா்வ லோகேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலை பாடினா்.

அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேங்காய், எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. செஞ்சி டிஎஸ்பி பிரியதா்ஷினி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் பூசாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT