விழுப்புரம்

ஏரி, குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய் நல்லூா், வானூா் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக, கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றவா்களுக்கு மட்டுமே உரம் வழங்குகிறாா்கள். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம், விவசாய இடு பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால், பொதுப் பணி, ஊரக வளா்ச்சி துறைகளுக்குச் சொந்தமான ஏரி வாய்க்கால்களையும், பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். ஆடி மாதம் வரவுள்ளதால், தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு சிறு பைகளில் ஆடிபட்ட விதைகள் வழங்க வேண்டும்.

விழுப்புரம் - நாகபட்டினம் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிராமங்களில் விவசாயப் பொருள்களை உலா்த்த உலா் களம் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.

இந்த குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்காததால், வருகிற ஜூலை மாதம் 6-ஆம் தேதி கோட்ட அளவில் மீண்டும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT