விழுப்புரம்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

DIN

விழுப்புரத்தில் போதைப் பொருள்களுக்கான எதிரான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாக மைதானத்தில் விழுப்புரம் போதைப்பொருள் நுண் பிரிவு மூலம் சா்வதேச போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வுப் பாடல் குறித்த குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.பூா்ணிமா தலைமை வகித்து போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பாடல் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட, அதை மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து, மூவரும் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்து பேரணியில் பங்கேற்றனா்.

இந்தப் பேரணியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பு வரை சென்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (போதைப்பொருள் நுண் பிரிவு) ரவி, கலால் துறை உதவி ஆணையா் சிவா, காவல் ஆய்வாளா் (போதைப்பொருள் நுண் பிரிவு) பத்மஸ்ரீ, இ.எஸ்.கல்விக் குழுமத் தாளாளா் சாமிக்கண்ணு, விழுப்புரம் சமூகநீதி பாதுகாப்பு இயக்கத் தலைவா் குபேரன், விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT