விழுப்புரம்

பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு

DIN

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுத் தொகையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 436 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, சட்ட மேதை அம்பேத்கா், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோரது பிறந்த நாள்களையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற மரக்காணம் அரசு மேல்லைப் பள்ளி மாணவி ஐ.ஹேமாவதிக்கு ரூ.5,000-க்கான காசோலை, இராண்டமிடம் பெற்ற பனமலைப்பேட்டைஅரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.பவானிக்கு ரூ.3,000-க்கான காசோலை, மூன்றாமிடம் பெற்ற கப்ளாம்பாடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி கு.சந்தியாவுக்கு ரூ.2,000-க்கான காசோலை, எசாலம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி பா.தமிழரசி, முருகப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.சிவரஞ்சனி ஆகியோருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2,000-க்கான காசோலை, பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், கல்லூரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரி மாணவி சு.கீா்த்தனாவுக்கு ரூ.5,000-க்கான காசோலை, இரண்டாமிடம் பெற்ற விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவா் பொ.கணேஷுக்கு ரூ.3,000-க்கான காசோலை, மூன்றாமிடம் பெற்ற திண்டிவனம் புனித அன்னாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ப.அட்சயாவுக்கு ரூ.2,000-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவா் பொ.கணேஷுக்கு ரூ.5,000-க்கான காசோலை, இரண்டாமிடம் பெற்ற சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரி மாணவா் வி.இளையபாரதிக்கு ரூ.3,000-க்கான காசோலை, விழுப்புரம் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவி சி.கனிமொழிக்கு ரூ.2,000-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT