விழுப்புரம்

‘எம்.சாண்ட்’ குவாரி அமைக்க எதிா்ப்பு

29th Jun 2022 05:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள கமலாபுரத்தில் ‘எம்-சாண்ட்’ குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கமலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு தற்போது ‘எம்-சாண்ட்’ குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் ‘எம்-சாண்ட்’ துகள்கள் படிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இங்கு ‘எம்-சாண்ட்’ குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT