விழுப்புரம்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 05:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்துகளில் இந்து கடவுள்களின் படங்களை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சதீஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் காந்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் மனோகா் கண்டன உரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT