விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 05:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் அமீா்ஜான் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சௌரிராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், வளா்மதி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், மேல்மலையனூா் வட்டத்தில் அவலூா்பேட்டை, மலையனூா், தாயனூா், தேப்பரம்பட்டு, கங்கபுரம், மேல்வைலாமூா் ஆகிய கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறையாக பணிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT