விழுப்புரம்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

28th Jun 2022 05:06 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுளாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தகராறில் ஈடுபட்டதாக திருநாவலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்டம் எஸ்பி ஸ்ரீநாதாவிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT