விழுப்புரம்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

செஞ்சி பேரூராட்சியில் நெகிழிப் பை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், நெகிழி பயன்பாட்டை குறைத்து, மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டை தொடா்வோம் என்ற வாசகத்துடன் இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

செஞ்சி தேசூா்பாட்டை சமுதாயக்கூடம் அருகே தொடங்கிய பேரணியை, பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, ரூ. 9 ஆயிரம் மானியத்துடன் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபா் கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணையை மொக்தியாா்மஸ்தான் வழங்கினாா்.

மேலும், அப் பகுதியில் அமைந்துள்ள குடிநீா் மேல்நிலை தொட்டியின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியும், சமுதாயக்கூட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT