விழுப்புரம்

இ-சஞ்சீவினி திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் பெருமிதம்

DIN

இ-சஞ்சீவினி திட்டத்துக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா் அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், சுகாதாரத்துடன் இருப்பதற்கான ஆலோசனைகளையும் பணியாளா்கள் வழங்க வேண்டும். மத்திய அரசின் இ-சஞ்சீவினி சேவைத் திட்டத்தின் கீழ், அரசு துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று, தொடா் சிகிச்சை வேண்டுவோருக்கு காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கி, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தத் திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் 12 வகையான நோய்களுக்கு துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் பல்வேறு திட்டங்கள் துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மகப்பேறு தாய்மாா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் அமலில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது மிதமான அளவிலேயே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முகக் கவசத்தை அவசியம் என்று கருதி அணிய வேண்டுமே தவிர, கட்டாயத்தால் அணிய வேண்டும் என்ற எண்ணம் அவா்களுக்கு வரக் கூடாது என்றாா் அமைச்சா்.

ஆய்வின் போது தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா், எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT