விழுப்புரம்

திமுக ஒன்றியச் செயலா் பதவிகளுக்கு விருப்ப மனு

26th Jun 2022 06:47 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மத்திய மாவட்ட த்துக்கு உள்பட்ட திமுக ஒன்றியச் செயலா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பியவா்களிடம் இருந்து மனுக்கள் சனிக்கிழமை பெறப்பட்டன.

திமுகவின் 15-ஆவது உள்கட்சித் தோ்தல் இப்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மத்திய மாவட்ட த்தில் உள்ள வானூா் கிழக்கு, வானூா் மேற்கு, கிளியனூா், கண்டமங்கலம் கிழக்கு, கண்டமங்கலம் மத்தி, கண்டமங்கலம் மேற்கு, விக்கிரவாண்டி கிழக்கு, விக்கிரவாண்டி மத்தி, விக்கிரவாண்டி மேற்கு, காணை வடக்கு, காணை மத்தி, காணை தெற்கு, கோலியனுா் கிழக்கு, கோலியனூா் மேற்கு, கோலியனூா் தெற்கு, முகையூா் வடக்கு, முகையூா் தெற்கு, மணம்பூண்டி, திருக்கோவிலூா் கிழக்கு, திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஆகிய ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட விரும்புவோா்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விருப்ப மனுக்களை கட்சியின் மாநில பிரதிநிதி பெ.குழந்தைவேலு, மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT