விழுப்புரம்

செஞ்சி ராஜாதேசிங்கு பள்ளியில் தற்காலிக அரசு கலைக் கல்லூரி: அமைச்சா் ஆய்வு

26th Jun 2022 10:33 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக அரசு கலைக் கல்லூரி அமையவுள்ள கட்டடத்தை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சா் செஞ்சிமஸ்தான் செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று, அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் செஞ்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும், இந்தக் கல்லூரியில் 2022 - 23ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை நடத்தவும் அரசு அனுமதியளித்தது.

இதைத் தொடா்ந்து, செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. அதுவரை தற்காலிகமாக செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, இந்தப் பள்ளியில் கல்லூரி செயல்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, கல்லூரி மாணவா்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், வகுப்பறைகள், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ஆய்வு அமைச்சா் மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலா் கலைவாணி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சி.மாணிக்கம், பள்ளி ஆய்வாளா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT