விழுப்புரம்

ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை: மீனவா்கள்கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தல்

26th Jun 2022 10:32 PM

ADVERTISEMENT

 

பொதுப் பணித் துறை ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவா்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில பருவதராஜகுல மீனவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். பருவதராஜ மீனவா்கள் பொது அறக்கட்டளை நிறுவனா் இ.சாமிகண்ணு முன்னிலை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் ராகவன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செந்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

சங்க உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் அண்ணாமலை, நாகராஜன், பரமசிவம், ஆலோசனைக் குழுத் தலைவா் தமிழரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் பொது ஏலத்தில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. மீனவா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கே மீன் பிடிக்கும் உரிமையை வழங்க வேண்டும். மீன்வா்களின் உரிமையை காக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடில் உள்ள பருவதராஜகுல மீனவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT