விழுப்புரம்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஓவியங்கள்

26th Jun 2022 06:47 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் நகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் தொடக்கிவைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் மருத்துவா் இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தினா், விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று, பேருந்து நிலைய வளாக சுற்றுச் சுவா்களில் ‘என் நகரம் - என் பெருமை’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்தனா்.

நகரின் தூய்மையைப் பாதுகாக்க பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வலியுறுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் ஓவியங்கள் வரையப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கூறினாா். தொடா்ந்து, தூய்மை இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி ரவி, நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, நகா்மன்ற துணைத் தலைவா் சித்திக் அலி, தமிழ்நாடு ஓவியா்கள் சங்க மாவட்டத் தலைவா் அன்பரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT