விழுப்புரம்

லாரி மீது மொபெட் மோதல்: தம்பதி பலி

24th Jun 2022 10:33 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே நின்றிருந்த லாரி மீது மொபெட் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(45). இவரது மனைவி அம்சவள்ளி (35). இருவரும் புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூரில் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு ராதாகிருஷ்ணன், அம்சவள்ளி இருவரும் திருக்கனூரிலிருந்து மொபெட்டில் பையூருக்கு வந்து கொண்டிருந்தனா்.

விழுப்புரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அயினம்பாளையம் பகுதியில் வந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது மொபெட் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன், அம்சவள்ளி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT