விழுப்புரம்

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ். உருவப் படம் அழிப்பு

24th Jun 2022 10:36 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படம், பெயரை அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை அழித்தனா்.

ஒன்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக அதிமுகவில் பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக சுவா்களில் வரையப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படங்கள், பெயா்களை அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை அழித்தனா். இதேபோல, விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வரையப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் உருவப் படங்களை அழித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT