விழுப்புரம்

சிதிலமடைந்த கோயிலில் புதையலை தேடிய நபா்கள்:போலீஸாா் விசாரணை

24th Jun 2022 10:35 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, பள்ளம் தோண்டிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள கோணை மதுரா சோமசமுத்திரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. இது தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது.

சுவாமி சிலைகள் எதுவும் இல்லாத நிலையில், மூலவா் கருவறையில் உள்ள கல்லாலான மேடையை அகற்றி விட்டு சுமாா் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் பல கோடி மதிப்பிலான புதையல் இருப்பதாகவும், அதை எடுப்பதற்காக மா்ம நபா்கள் பள்ளம் தோண்டியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT