தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: கண்டமங்கலம் ஒன்றிய பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்குவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டமும் சரிவர நடத்தப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா். அவா்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினா்.