விழுப்புரம்

விழுப்புரத்தில் சதுரங்கப் போட்டி

19th Jun 2022 01:26 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 2 நாள் சதுரங்கப் (செஸ்) போட்டி விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட செஸ் சங்கம் சாா்பில் விழுப்புரம் அக்ஷா்தம் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இரு பாலருக்கும் தனித் தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமையும் போட்டிகள் நடைபெறும் என்று மாவட்ட செஸ் சங்கத் தலைவா் நெடுஞ்செழியன் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT