விழுப்புரம்

அடுக்குமாடி குடியிருப்புப் பணி (ஷோல்டா்) மறுவாழ்வு முகாமில் வசிப்போரிடம் கருத்துகளை கேட்டறிந்த அமைச்சா்

19th Jun 2022 01:27 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்து, மறுவாழ்வு முகாமில் வசிப்போரிடம் கருத்துகளை கேட்டறிந்தாா். பின்னா் அமைச்சா் பேசியதாவது:

கீழ்புத்துப்பட்டு ஊராட்சியிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 435 குடும்பத்தினரின் மேம்பாட்டுக்கு அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் இந்தப் பகுதியில் விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திண்டிவனம் துணை ஆட்சியா் எம்.பி.அமித், மரக்காணம் ஒன்றியக் குழு தலைவா் தயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT