விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம், பம்பக்கரை பகுதியில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மருதப்பன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இது தொடா்பாக விழுப்புரம் அருகே சித்தாமூரைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஏழுமலையை (48) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.