விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 295 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மனைப் பட்டா, ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை
ஆட்சியா் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
மேலும், முதல்வரின் தனிப் பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சா்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், நில அளவை உதவி இயக்குநா் சீனுவாசன், தனித் துணை ஆட்சியா் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.