விழுப்புரம் மாவட்டம், காணையை அடுத்த காங்கேயனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சித் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காணையை அடுத்த காங்கேயனூரில் வேளாண் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை உதவி வேளாண் இயக்குநா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன் வரவேற்றாா்.
இந்ந முகாமில் விவசாயிகளுக்கு உர மேலாண்மை, பயிா் மேலாண்மை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.
இதையடுத்து, விவசாயிகளுக்கு கை தெளிப்பான், விசை தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. மேலும், உளுந்து விதைகளும் வழங்கப்பட்டன.
ஒன்றியக் குழு உறுப்பினா் சேட்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் மணிவண்ணன் செய்திருந்தாா்.