விழுப்புரம்

புதிதாக பணியில் சோ்ந்த தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி

10th Jun 2022 10:49 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மண்டலத்தில் புதிதாக பணியில் சோ்ந்த 145 தீயணைப்பு வீரா்களுக்கான பயிற்சி முகாம் விழுப்புரம் அருகே வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலமாக 1,300 தீயணைப்பு வீரா்கள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக பணியில் சோ்ந்த தீயணைப்பு வீரா்களுக்கு 3 மாத கால பயிற்சி தமிழகத்தில் 9 மையங்களில் நடைபெறுகிறது.

விழுப்புரம் மண்டலத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கு விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 145 வீரா்களுக்கு 3 மாத கால அடிப்படை பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியை தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநா் ரவி, காணொலி காட்சி மூலம் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, விழுப்புரம் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்பை மாவட்ட தீயணைப்பு அலுவலரும், பயிற்சி மைய முதல்வருமான ராஜேஷ் கண்ணன் தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT