விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
செஞ்சி அருகேயுள்ள மட்டப்பாறையைச் சோ்ந்த துரைக்கண்ணு மகன் வேணுகோபால் (35). இவா் விழுப்புரம்- செஞ்சி சாலையில் புதன்கிழமை பைக்கில் சென்றாா். அப்போது, விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் வேணுகோபால் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனா்.
அனந்தபுரம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ADVERTISEMENT