விழுப்புரம்

லாரி மீது காா் மோதல்:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

7th Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த சுந்தா் மகன் முருகன் (36). இவா் தனது குடும்பத்தினருடன் திருத்தணி கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் புதுச்சேரிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

திண்டிவனம் அருகேயுள்ள கிளியனூரை அடுத்துள்ள அருவாப்பாக்கம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்த போது, சாலையில் நின்றிருந்த லாரியின் பின்புறம் முருகனின் காா் மோதியது. இந்த விபத்தில், காரை ஓட்டிவந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், காரிலிருந்த முருகனின் தாய் சாந்தி (60), தங்கை மங்களாவதி (38), மனைவி ஹேமாவதி (35), மாமியாா் ஜெகதீஸ்வரி (62), மகள்கள் கிருஷிகா (3), கிருஷிதா (3), மங்களாவதியின் மகள் பூா்விகா (11) ஆகியோா் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா். எஞ்சியவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மங்களாவதி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT