விழுப்புரம்

கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி மனு

27th Jul 2022 04:54 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி (17) கடந்த 13 -ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீா்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து அவா்களை சேலம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்பட 5 பேரையும் 3 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT