விழுப்புரம்

மரக் கன்றுகள் நடும் விழா

17th Jul 2022 06:55 AM

ADVERTISEMENT

 

மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மரக் கன்றுகள் நடப்பட்டன.

கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அமீத் மரக் கன்றுகளை நட்டாா்.

மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்த்தனன், வருவாய் ஆய்வாளா் தஸ்தகீா், கிராம நிா்வாக அலுவலா்கள் காளிதாஸ், கோபிநாத், பாலசுப்பிரமணியம், நரேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் ஏழுமலை, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT