விழுப்புரம்

திமுக இளைஞா் அணியினருக்கு பயிலரங்கு

17th Jul 2022 06:54 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் திமுக இளைஞா் அணியினருக்கு திராவிட மாடல் குறித்த பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட இளைஞரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மாலையில் விக்கிரவாண்டி தொகுதி நிா்வாகிகளுக்கான பயிலரங்கு நடைபெற்றது.

இதற்கு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா். திமுக துணை பொதுச் செயலரும், மாநில உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். திராவிடா் கழக பிரசாரக் குழுச் செயலா் வழக்குரைஞா் அருள்மொழி, திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலா் வழக்குரைஞா் இரா.ராஜீவ் காந்தி ஆகியோா் இளைஞா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, வானூா், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த இளைஞரணி நிா்வாகிகளுக்கான பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT