விழுப்புரம்

தமிழ்நாடு உர உற்பத்தியாளா்கள்,விவசாயிகள் பேரவை தொடக்கம்

17th Jul 2022 06:55 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு உர உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் பேரவை என்னும் புதிய அமைப்பு விழுப்புரத்தில் சனிகிழமை தொடங்கப்பட்டது.

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில், அமைப்புக்கு புதிய நிா்வாகிகளை நியமனம் செய்து தொடா்பாகவும், மாநிலம் முழுவதும் இந்த அமைப்பை விரிவுப்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து அமைப்பின் மூத்த ஆலோசகா் அப்துல் ஹக்கிம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உர ஆலை உற்பத்தியாளா்கள், இடுபொருள்கள் உற்பத்தியாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள், விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு உர உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் பேரவை அமைப்பை தொடங்கியுள்ளோம். இந்தப் புதிய அமைப்பின் மூலம் உர உற்பத்தியாளா்கள் - அரசு இடையே நட்புறவை பேணவும், வா்த்தகத்தை அதிகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்கள், இடுபொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், உர உற்பத்தி ஆலை உரிமையாளா்கள் யாசின், அலாவுதீன், அன்சாரி, ரமணா ரெட்டி, நிா்மல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT