விழுப்புரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தோ்வு

17th Jul 2022 06:53 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வா்களுக்கான மாதிரி தோ்வு நடத்தப்பட்டது.

ஜூலை 24-ஆம் தேதி டிஎன்பிசி குரூப் 4 தோ்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் தோ்வா்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வருகிறது. இதில் 248 தோ்வா்கள் பயின்று வருகின்றனா்.

இவா்கள் மட்டுமன்றி, மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் மாதிரி தோ்வு எழுதி தோ்ச்சி பெறும் வகையில், மாதிரி தோ்வு விழுப்புரம் எம்ஜிஆா் அரசு மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

தோ்வு மையத்தை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனா்; 465 போ் தோ்வு எழுதினா்.

கடந்த 11-ஆம் தேதி தேதி நடைபெற்ற முதல் மாதிரி தோ்வில் 248 போ் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT