விழுப்புரம்

மின்வாரிய செயற்பொறியாளா் தற்கொலை

7th Jul 2022 01:44 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் மின்வாரிய செயற்பொறியாளா் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (50).விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இதற்காக விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் வீடு எடுத்து தங்கியிருந்தவா், பணிக்காக தினமும் திண்டிவனம் சென்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து சதீஷ்குமாா் விழுப்புரம் வீட்டுக்கு வந்தாா். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினா் அவரிடம் விசாரித்தபோது, தான் விஷம் அருந்திவிட்டதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, அவரை குடும்பத்தினா் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் சதீஷ்குமாா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT