விழுப்புரம்

ஆலம்பூண்டியில் நாடக மேடைக்கு அடிக்கல்

7th Jul 2022 01:43 AM

ADVERTISEMENT

 

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கு அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்தப் பணி நடைபெறுகிறது.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் முத்தம்மாள் சேகா் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT