விழுப்புரம்

சுகாதார ஆய்வாளா் பணியிடை நீக்கம்

7th Jul 2022 01:42 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுக் கழிப்பறை பூட்டிக் கிடந்தது தொடா்பாக சுகாதார ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை காலை நடைப் பயிற்சியின்போது புதிய பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வுமேற்கொண்டாா். அப்போது, பொதுக் கழிப்பறை பூட்டிக் கிடந்தது. மேலும், கழிப்பறை கட்டடம் உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது. பேருந்து நிலையம் பகுதியும் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT