விழுப்புரம்

அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி:பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை அரசு நிலத்தை தனி நபா் ஆக்கிரமிக்க முயன்றதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நிலத்தை சமன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

மேல்மலையனூா் அருகே அன்னமங்கலம் கிராம மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசு மலை புறம்போக்கு நிலத்தை உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் சிலா் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக திண்டிவனம் சாா் - ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் நிகழ்விடதுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கு தனி நபா் பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு நிலத்தை சமன் செய்து, அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றது தெரியவந்தது.

உடனடியாக நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சமத்துவகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் மீது நடவடிக்கை எடுக்கவும், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்யவும் மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்தனுக்கு சாா் - ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அன்னமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் வளத்தி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வளத்தி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT