விழுப்புரம்

பாஜகவினா் உண்ணாவிரதம்

6th Jul 2022 03:29 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ாக திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மீனாட்சி நித்திய சுந்தா், கடலூா் மாவட்டப் பாா்வையாளா் கலிவரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா்கள் ராம.ஜெயகுமாா், பாண்டியன், சத்யநாராயணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் சிவ.தியாகராஜன், தா்மராஜ், விழுப்புரம் நகரத் தலைவா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எ.ஜி.சம்பத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

வந்தவாசி: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் வந்தவாசி தேரடியில் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் பி.முத்துசாமி, மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஆா்.சுரேஷ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் பா.டால்பின் ஸ்ரீதா், தேசிய பொதுக் குழு உறுப்பினா் பி.பாஸ்கா் உள்ளிட்டோா் திமுக அரசைக் கண்டித்துப் பேசினா். இதில் திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT