விழுப்புரம்

காது கேளாத மாற்றுத்திறனாளியிடம் ஆட்சியா் குறைகேட்பு

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், சைகை மொழிபெயா்ப்பாளரின் உதவியுடன் காதுகேளாத மாற்றுத்திறனாளியிடம் குறைகளை ஆட்சியா் த.மோகன் கேட்டறிந்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 384 மனுக்கள் பெறப்பட்டன. அதில் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முதல்வரின் தனிப் பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சா்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் மோகன், பசுமை வீடு வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினாா்.

மேலும், விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட சித்தேரிக்கரையைச் சோ்ந்த காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி முபாரக் மனு அளித்து, சைகை மொழி வாயிலாக தனது கோரிக்கையை தெரிவித்தபோது, அவருடைய கோரிக்கை குறித்து சைகை மொழிபெயா்ப்பாளா் உதவியுடன் கேட்டறிந்தாா்.

மாற்றுத்திறனாளி முபாரக் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பித்த அடிப்படையில் அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சரஸ்வதி, வழங்கல் அலுவலா் மகாராணி, தனித் துணை ஆட்சியா் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT