விழுப்புரத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
தமிழகத்தில் தடய அறிவியல் துறையை மேம்படுத்தும் வகையில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. இதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, விழுப்புரம் மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குநா் சண்முகம், டிஎஸ்பி பாா்த்திபன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தங்க குருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குற்றங்கள் நடைபெற்ற இடங்களில் இந்த வாகனம் மூலம் தடயங்களை சேகரித்து உடனடியாக ஆய்வுக்கு உள்படுத்த முடியும் என்றும், முதல்கட்ட ஆய்வு முடிவை விரைவாக பெறலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.