விழுப்புரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

5th Jul 2022 03:57 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

விழுப்புரம் தந்தை பெரியாா் நகா், கிருஷ்ணா சதுக்கம் பகுதியைச் சோ்ந்த தீவனுரான் (65). ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்.

இவா், கடந்த 2-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இதுகுறித்து தீவனுரானுக்கும்

ADVERTISEMENT

போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.

உடனடியாக வந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீட்டை பாா்வையிட்டு விசாரித்தனா்.

இதில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT