விழுப்புரம்

பாஜகவினா் எஸ்பி அலுவலகத்தில் புகாா்

5th Jul 2022 04:00 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையிலான அந்தக் கட்சியினா் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல், பிரதமா் நரேந்திர மோடி குறித்தும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளாா்.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT